PurampokkuEngiraPodhuvudamai-2015| movie review|புறம்போக்கு திரைவிமர்சனம்

Vijay-sethupathi-Arya-Starrer-purambokku-movie-title-changed

எங்கள் ஊர் கடலூரில் பாதிரிக்குப்பம் ஜெகதாம்பிகா டென்ட் கொட்டாயில் பார் மகளே பார், பாசமலர், துலாபாரம் , போன்ற படங்களை பார்த்து விட்டு பெண்கள் இழவு வீட்டுக்கு சென்று ஒப்பாரி வைத்து விட்டு வாயையும் மூக்கையும் சேர்த்து மூடிக்கொண்டு வருவார்களே அது போல படத்தை பார்த்து விட்டு டென்ட் கொட்டகை விட்டு வெளியே வரும் போது துக்கம் தாங்கால் புடவை தலைப்பால் வாயை பொத்தி வருவார்கள்..

சிலருக்கு அழுது அழுது கண்கள் வீங்கி இருக்கும் அது போல புறம் போக்கு படம் பார்த்து விட்டு வெளியே வரும் ஆண்கள் பெண்கள் ரசிகர்களின் கண்கள் வீங்கி இருக்கின்றன….

காரணம் படத்தின் கடைசி அரைமணி நேரம்… அதுவும் விஜய் சேது பதி படத்தின் முக்கால் வாசி பகுதியில் கிளிஷே காட்சிகள் போல நடித்துக்கொண்டு இருந்தவர்.. கடைசி அரைமணி நேரம் பின்னி பெடலெடுத்துவிட்டார் என்றே சொல்ல வேண்டும்..

சென்னையில் ஒரு நல்ல திரைப்படம் முடிந்தவுடன் கைதட்டு பழக்கம் பரவலாக மாற காரணம் உலக திரைப்படவிழாக்கள் என்பேன்.. உலக திரைப்பட விழாக்களில் படம் முடிந்தவுடன் நன்றாக இருந்தால் கை தட்டுவார்கள்… அதுதான் அந்த படத்தினை பற்றிய மதிப்பீடு…

அது போல புறம்போக்கு திரைப்படம் முடிந்தஉடன் கை தட்டினார்கள்… முக்கியமாக ஒரு திரைப்படத்தை கூடுமானவரை பிசி ரசிகர்கள் படம் பார்க்கும் தியேட்டர்களையே தேர்ந்து எடுப்பேன்… சங்கம் தியேட்டரில் காலை காட்சி முடியும் போது தியேட்டரில் உணர்ச்சிவசப்பட்டு ரசிகர்கள் கை தட்டி மகிழ்ந்தார்கள்.

===============
சரி … புறம்போக்கு திரைப்படத்தின் கதை என்ன??

இந்திய அரசாங்கத்தால் தீவிரவாதிஎன்று முத்திரைக்குத்தப்பட்ட ஆர்யா(பாலு)பல்வேறு வழக்குகளில் சம்மந்தபட்டவன்… அவனை 27 நாட்களில் தூக்கு தண்டனை நிறைவேற்ற இந்திய சர்கார் போலிஸ் ஆபிசர் ஷாமை பணிக்கின்றது…

ஆர்யாவின் தோழர் கிருத்திகா (குயிலி) ஆர்யா சிறையில் இருந்து தப்பிக்க வைக்க முயற்சிசெய்கின்றார்… 27நாளில் தூக்கு அந்த தண்டனையை தமிழ் நாட்டில் நிறைவேற்ற கூடியவன்.. விஜய்சேதுபதிதான்.. (எமலிங்கம்) ஆனால் அவனோ.. தூக்கு தண்டனை நிறைவேற்றும் பணியை வெறுக்கின்றான்…

ஆனால் 27 நாளில் தண்டனையை எல்லாவற்றையும் சரி செய்து ஆர்யா தண்டனையை நிறைவேற்றினார்களா- ? இல்லையா என்பதே புறம்போக்கு படத்தின் கதை.

=====
ஆர்யா சான்சே இல்ல.. ஹீரோயிசம் என்பதை எடுத்து மூட்டைக்கட்டி வைத்து விட்டு நிதர்சனத்தோடு இந்த படத்தின் திரைக்கதை பயணம் செய்வதால் ஒன்றி ரசிக்க முடிகின்றது…

விஜய் சேதுபதி சான்சே இல்லை… படத்தின் முதல் பாதியில் வழ வழ கொழ கொழ என்று இருந்தாலும் இடைவேளைக்கு பின் சேதுபதி பின்னுகின்றார்.. அதுவும் படத்தின் கடைசி 15 நிமிடம்.. எல்லோருடைய கண்களும் குளமாக்க காரணமாகின்றார்…
கார்த்திகா… அவருக்கான பணியை அவர் செய்து இருந்தாலும் அன்னியப்பட்டு காட்சி அளிக்கின்றார்… நாமும் கம்யூனிச தோழர்கள் நிறைய பேரை பார்த்து இருக்கின்றோம் அல்லவா..??

ஷாம்… சிறப்பான நடிப்பு… அது மட்டுமல்ல… கம்யூனிச பொதுவுடமை சித்தாந்த கருத்துக்களை ஆர்யா சொல்வதும் அரசு தரப்பு வாதங்களை ஷாம் பார்வையில் சொல்வதும் சிறப்பாக எழுத்து மற்றும் வசனங்கள்.

தூக்குதண்டனை குறித்த மிகச்சிறப்பான திரைப்படம் என்றால் என்னை பொருத்தவரை கொரிய திரைப்படமான மிராக்கள்இன் செல் நம்பர் 7 மற்றும் தி லைப் ஆப் டேவிட் காலே திரைப்படங்களை பார்த்தீர்கள் என்றால் கொடுமையாக இருக்கும்..
பொதை மருந்து கடத்திலில் நிறைய அப்பாவிகள் டிரக் டிராபிக்காரரர்களால் சிக்க வைத்து மரணதண்டனை பெற்ற அப்பாவிகள் உலகம் முழுக்க பெரிய லிஸ்ட்டே இருக்கும்.

ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவு பின்னி மில்லை நிஜ சிறைச்சாலையாக மாற்றி இருக்கின்றது.. பாடல்கள் பெரிதாய் கவராமல் தொங்கி நிற்கின்றன.. முதல் ரயில்வே நிலைய சேதுபதி பாடல் ஓகே ரகம்.

இயக்குனர் ஜனநாதன் கமர்ஷியலுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இது போன்ற கதைக்களனை தேர்ந்து எடுத்து கூடுமானவரை நேர்த்தியாக கொடுத்தமைக்கு அவருக்கு ஒரு பூங்கொத்து.

=========
படத்தின் டிரைலர்.


=====
படக்குழுவினர் விபரம்.

Directed by S. P. Jananathan
Produced by Siddharth Roy Kapur
S. P. Jananathan
Written by S. P. Jananathan
Starring Arya
Shaam
Vijay Sethupathi
Karthika Nair
Music by Varshan
Srikanth Deva (Background score)
Cinematography N.K.Ekambaram
Edited by N.Ganesh Kumar
Production
company
Binary Pictures
UTV Motion Pictures
Distributed by UTV Motion Pictures
Release dates
May 15, 2015 [1]
Country India
Language Tamil
======
பைனல்கிக்..
இந்த படம் சமுகத்தின் மீது அன்பு கொண்டவர்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்.. கமர்ஷியல் ரசிகர்கள் கொஞ்சம் நெளிவார்கள்.. ஆனால் அதை படத்தின் கடைசி அரைமணி நேரம் காப்பாற்றி கொடுத்து விடுவது உண்மை.. புறம்போக்கு பார்க்க வேண்டிய திரைப்படம். அரைத்த மாவையே அரைக்காமல் சமுகத்தின் குரலாய் நிறைய விஷயங்களை மக்களிடம் சினிமா மூலம் கொண்டு போய் சேர்த்தமைக்கு-

========
படத்தோட ரேட்டிங்.
பத்துக்கு எழு,
====
ஜாக்கிசேகர்.
15/05/2015

வீடியோ விமர்சனம்..