Valiyavan movie review | Jai, Andrea Jeremiah | M.Saravanan | D.Imman

valiyavan-posters-2

முதல் திரைப்படமான எங்கேயும் எப்போதும் திரைப்படத்தில் தலை நிமிர்ந்து… சற்றே இவன் வேறமாதிரி திரைப்படத்தில் சின்னதாக சருக்கி… மூன்றாவது திரைப்படமான வலியவன் மூலம் என்ன சொல்ல வருகின்றார் என்பதை இப்போது பார்த்து விடலாம்…

பொதுவா இயக்குனர் சரவணன் இயக்கும் திரைப்படத்தின் நாயகிகள் கொஞ்சம் துடுக்குதனமானவர்கள்… இவன் வேற மாதிரி திரைப்படத்தில் அது மிஸ்சிங்… வட்டியும் முதலுமாக இந்த படத்தில் ஆண்ட்ரியாவை துணைக்கு அழைத்து வந்துள்ளார்…

சரி படத்தின் கதை என்ன வென்று பார்த்து விடலாம்..

சாது மிராண்டால் காடு கொள்ளாது என்பதுதான் ஒன்லைன்…

============

ஒரு பெண் உங்களை சென்னை சப்வேயில் பார்த்து காதலிக்கின்றேன் என்று அவளாக சொல்லுகின்றாள்..? அவளை எல்லா இடத்திலும் தேடுகின்றீர்கள்…. தேடி கண்டு பிடித்து ஐ லவ்யூ என்று சொல்ல நினைத்தால்… ஒருத்தனை அடிக்க வேண்டும் என்று சொன்னால் அந்த பெண்ணை நீங்கள் காதலிப்பிர்களா? இல்லையா என்பதே வலியவன் திரைப்படத்தின் கதை…

======

படத்தின் சுவாரஸ்யங்கள் மற்றும் மைனஸ்கள் (ஸ்பாய்லர் அலெர்ட்.)

விடலை பையனாக அறிமுகமான ஜெய் அவர் கேரியரில் எங்கேயும் எப்போதும், ராஜராணிக்கு பிறகு மறக்க முடியாத திரைப்படம் வலியவன் ….மனிதர் பின்னி இருக்கின்றார்…. நடிப்பில் நல்ல முதிர்ச்சி தெரிகின்றது…. அப்பா அம்மா மூன்று பேரும் காமினேஷன் ஷாட்டுல நல்லாவே நடிச்சி இருக்கார்… அதே போல பாலசரவணனோடு மாலில் பேசும் வசனங்கள் ரொம்ப இயல்பா இருக்கு… லாஸ்ட் பைட்டுல சிக்ஸ் பேக் காமிக்கும் போது நிமிர்ந்து நிற்பதோடு ரசிக்கவும் செய்கின்றார்…

ஆண்ட்ரியா.. சான்சே இல்லை… ரொம்ப ஹாட்டாக இருக்கின்றார்… அதுவும் அவர் அணிந்து வரும் காஸ்ட்யூம்கள் ஏசி தியேட்டரையும் மீறி வியர்க்க வைக்கின்றன… அவர் கொஞ்சம் புஷ்ட்டியான டயட்டுக்கு பின் பனியன் காஸ்ட்யூம் போடலாம் என்பது என் அபிப்ராயம்.யெலோமியோ சாங்கில் அண்ட்ரியாவை மிக ரசனையுடன் படமாக்கி இருக்கின்றார்கள்… அதுவும் அந்த ரெட் காஸ்ட்‘யூமில் ஜேம்ஸ் பாண்ட் படத்தின் புரொட்யூசர் பார்த்தால் கொத்திக்கொண்டு போய்விடுவார்கள்..

Andrea-Jeremiah-in-Valiyavan-Stills-1
அழகம் பெருமாள் தன்னுடைய மெச்சூர்டான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கார் என்றே சொல்ல வேண்டும்… அவர்தான் ஆண்ட்ரியாவை லவ்வி விடுவரோன்னு கொஞ்சம் பீதியை கிளம்பிளாலும்…. பாசமுள்ள தகப்பனாக  பல்லு உடைஞ்சி கலக்கி இருக்கின்றார் என்றே சொல்ல வேண்டும்…

ஜெய்க்கு அம்மா பாத்திரத்தில் அனுபமா குமார் நடித்து இருக்கின்றார்… தமிழ் திரையுலகில் துளசிக்கு இணையாக இயல்பாக நடித்து ஜெயிப்பதில் அனுபமா முன்னேறி வருகின்றார் என்றே சொல்ல வேண்டும்.. மீகாமன், வம்சம் , மூடர் கூடம் வரிசையில் அவர் இயல்பான நடிப்பில்  இந்த திரைப்படத்தையும் சொல்லாம்.. அப்பா மகன் போட்டியில் பிள்ளை தோற்று விடக்கூடாது என்று அவர் பேசும் வசனங்களில் இயல்புகளில் உண்மையான அம்மா யாரோ உட்கார்ந்து பேசுவது போல உள்ளது.. நடிப்பில் பின்னிஇருக்கின்றார்..

இமானின் இசையில் காதல் நெல்லவனா இல்லை கெட்டவான சாங்கும்… அஹா காதல் வந்து அடிச்சி துவைக்க சாங் போன்றவை கேட்க நன்றாக இருக்கிற்ன.

சில நேரங்களில் சில ஒற்றுமைகள் நம்மை அறியாமல் நடந்து விடுவதுண்டு….. நியாயத்தாரசு என்று ஒரு படம் 1990 களில் வந்த படம் என்று நினைக்கின்றேன்…… வெண்ணிலா என்னோடு பாடி ஆடவா பாட்டு மவுண்ட் ரோடு சப்வே போன்ற இடங்களில் எடுத்து இருப்பார்கள்…. 2015 இல் சப்வேயில் எடுக்கப்பட்டு இருக்கும் ஓ பேபி கம் வித் மி… பாட்டையும் கேட்கும் போது இரண்டு டியூனும் ஒன்று போல இருக்கின்றது…. மூல இசை மைக்கேல் ஜாக்சன் என்றுசொல்லக் கேள்வி..

தினேஷ் கிருஷ்ணண் ஒளிப்பதிவில் மவுண்ட் ரோடு மற்றும் விஜயா மால் போன்றவை டே மற்றும் அண்டு நைட் எபெக்ட்டில் பின்னுகின்றன…

என்டிடிவி இந்துவில் என்னோடு பனியாற்றிய எடிட்டர் சுபாராக் எடிட்டிங்கில்  பின்னி இருக்கின்றார்… முக்கியமாக 555 படத்தில் பரத்தும் நாயகியும் ஆடும் ஆட்டத்தில் உடைகள் மட்டும் மாறிக்கொண்டுஇருக்கும்… செமையான எடிட்டிங்…. படம் முழுக்க முக்கியமாக பாடல் காட்சிகளில் அழகாக கட் செய்து இருக்கின்றார்…

படத்தில் ரொம்ப ரசித்தே சீன் என்று பார்த்தால் இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலக்குமாரா படத்தில் சரக்கு கண்பிக்றேன் என்று ஒரு தாடி வைத்த நபர் அழைத்து போவாரே அவர் வரும் காட்சிகள் மூன்று என்றாலும் கலக்கி இருக்கின்றார்… முக்கியமாக அவர் பேசும் வசனம்… படிச்சி இருந்தா காதலை உட்டுக்குடுக்காதிங்க… அப்படி உட்டுக்குடுத்திங்கன்னா எது மேலயும் பற்று இருக்கவே இருக்காது.. என்ற சொல்லும் காட்சி அழகு…

1860இல்ல் கட்டப்பட்ட சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனை எதிரில்  உள்ள மெமோரியல் கட்டிடத்தில் பாக்சிங் பிராக்டிஸ்  செய்வது போல காட்சி படுத்தி இருப்பது சிறப்பு … இது போல பாராம்பரிய கட்டிடங்களில் படப்பிடிப்பு நடத்தி அவைகளை பதிவு பண்ண வேண்டுமாய்  வருங்கால இயக்குனர்களை கேட்டுக்கொள்கின்றேன்

====

படத்தின்டிரைலர்..

=========

படத்தின் மைனஸ்..

குடித்து விட்டு ஜெய்யோடு ஆண்ட்டிரியா வரும் பிளாஷ் பேக் கொஞ்சம் லென்திதான்…

ஒரு மாலில் உள்ள புட்கோர்ட்டில் கண்டிப்பாக டிஷ்யூ பேப்பர் இருக்கும் அதுக்கு சட்டையை கழட்டி அழகம் பெருமாள் துடைக்கும் இடம் மனதில் ஒட்டவில்லை.. இதே சீன் பீச்ல இருந்தா… ஓகே…

அதே போல அழகம் பெருமாளுக்கு பல் உடைஞ்ச விஷயம் ஆட்டோவுல வரும் போதும் படம் பார்க்கும் நமக்கே தெரியும் போது அனுபமா குமாருக்கு தெரியவில்லை என்று சொல்வது நம்பும் படி இல்லை…

ஆனால்… அப்பா புள்ளை ரெண்டு பேரும்… உதை வாங்கியதால் அந்த வலியை மிக அழகாக பதிவு செய்து இருக்கின்றார்.. அதே போல வசனங்களில் சரவணன் பின்னி இருக்கின்றார்…

கைதட்டறவன் எல்லாம் கேனை இல்லை.. அவன் ஸ்டார் ஆக ஆசைப்படலை…. அருமை…

======

படக்குழுவினர் விபரம்.,

Directed by M. Saravanan
Produced by K. Sampath
Written by M. Saravanan
Starring Jai
Andrea Jeremiah
Bala Saravanan
Music by D. Imman
Cinematography Dinesh Krishnan
Edited by Subarak
Production
company
SK Studios
Release dates
27 March 2015
Country India
Language Tamil
Budget INR8 crore

=========

பைனல் கிக்.
என்னை பொருத்தவரை பாடல்களை குறைத்து  வள வள காட்சிகளை குறைத்து திரைக்கதையில் இன்னும் டெம்ட் ஏற்றி இருந்தால்  இன்னும் ரசிக்கலாம்…

 இருப்பினும் இந்த திரைப்படம் பார்க்கலாம்… என்பது என் அபிப்ராயம்…

பிரியங்களுடன்

ஜாக்கிசேகர்

ஜாக்கிசினிமாஸ்

======

வலியவன் வீடியோ பதிவு.

https://youtu.be/ic5uuDpDlcs