Mass Movie Review by jackiesekar |மாஸ் என்கின்ற மாசிலாமணி திரை விமர்சனம்

Imttc

சூர்யா நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் வெங்கட் பிரபுவின் ஆறாவது படம்….ஏற்கனவே அஞ்சான் படத்தின் வெளியீட்டுக்கு முன் ஆடிய உற்சாகத்துக்கு சமுக வலைதளங்களில் குத்தி குதறியாதாலோ என்னவோ… மாஸ் திரைப்படத்துக்கு வெளியீட்டுக்கு முன் அலப்பறை அதிகம் இல்லாமல் பார்த்துக்கொண்டார்கள்…

அஞ்சான் திரைப்படத்தை ஓட்டு ஓட்டு என்று ஓட்டியகாரணத்தால்… நான் அந்த திரைப்படத்தை பார்க்காமல் தவறவிட்டேன்… ஆனால் திரும்ப டிவியில் அந்த படத்தை பார்த்த போது ஓரளவுக்கு நன்றாகவே இருந்தது என்பதுதான் உண்மை.. இப்படி சொல்லியதுமே.,. உன் ரசனையில் தீயை வைக்க என்ற சொல்லலாம்..… ஆனால் எனக்கு படம் அவ்வளவு மோசமில்லை என்று சொல்லுவேன்… சரி இந்த கலாய்ப்புக்கான காரணம் என்ன?… சூர்யாவை பெரிய டானாக ஏற்றுக்கொள்ளவில்லை… அதே போல சமந்தாவின் அதீத நெருக்கம் சூர்யா மீது பொறாமை கொள்ள செய்ததோடு… படம் வெளிவரும் முன்னே புரமோஷன் என்ற பெயரில் படக்குழுவினர் அடித்த கூத்துக்கள் ஏகத்துக்கு எதிர்பார்ப்பை கிளறி வைக்க.. படம் வந்தவுடன் பயங்கரமாக கலாய்க்க ஆரம்பித்து விட்டார்கள்…

அஞ்சான் கற்றுதந்த பாடம் இந்த படம் வெளிவரும் முன் அடக்கியே வாசித்தார்கள்..இத்தனைக்கும் மாஸ் டிரைலர் யூ டியுபில் ஹிட் அடித்தும் அமைதி காத்தார்கள்….

வெங்கட் பிரபு வெளியே தெரிய ஆரம்பித்தது.. பூஞ்சோலை என்ற படத்தின் மூலம்தான்…அந்த படம் தோல்வி… வெளியே வந்ததா? இல்லையா என்பது தெரியவில்லை… நான் சென்னையில் கல்யாணத்துக்கு வீடியோ போட்டோக்கள் அதிகம் எடுத்துக்கொண்டு இருக்கும் வேளையில், பணக்காரர்கள் திருமணத்தில் வெங்கட் பிரபு,யுகேந்திரன்,எஸ்பி சரண் போன்றவர்கள் இசைகச்சேரி நடத்தியதை பார்த்தும் கேட்டும் இருக்கின்றேன்…

ஆதே போல வெங்கட்பிரபுவின் உன்னை சரணடைந்தேன் போன்ற படங்கள் அவரை ஒரு கிறுக்கு பய என்ற தோற்றத்தை உண்டாக்கியது.. பட்.. இன்று ஆறு படங்கள் அதில் மூன்று திரைப்படங்கள் மெகா ஹிட் படங்கள்…ஸ்டார் அந்தஸ்த்து டைரக்டாராக உருவாகி இருப்பது சாதாரண விஷயம் இல்லை..

சூர்யா, வெங்கட் பிரபு இரண்டு பேருமே பார்ன் இன் சில்வர் ?ஸ்பூன் என்றாலும்இன்றைய வெற்றியை பெற நிரம்ப போராடியவர்கள்… இரண்டு பேரும் இணைந்த மாஸ் திரைப்படம் எப்படி இருக்கின்றது என்பதை இப்போது பார்ப்போம்..

=========
மாஸ் படத்தின் கதை என்ன??

மரணத்தின் அருகே சென்று உயிர் பிழைத்தவனுக்கு ஆவிகள் கண்ணுக்கு தெரிகின்றார்கள்… கண்ணுக்கு தெரிந்த ஆவிகள்… அவனிடம் உதவி கேட்கின்றன… அவனும் அவைகளிடம் உதவிகள் கேட்கின்றான்.. என்னமாதிரியான உதவிகள் என்பது படம் பார்த்து தெரிந்துக்கொள்ளவும்…

======
படத்தின் சுவாரஸ்யங்கள்

அஞ்சான் ராஜூபாயை பயங்கரமாக சமுக வலைதளங்களில் கலாய்த்து வைத்தார்கள்.. அதனால் இந்த படத்தில் கொஞ்சம் கவனத்துடன் அளவோடு ஆடி இருக்கின்றார்கள்… அதே போல ஆவியாக வரும் ஷக்தி கேரக்டர் புலம் பெயர் தமிழன் கேரக்டராக நடித்து இருக்கின்றார்… நன்றாகவும் நடித்து இருக்கின்றார்…

மங்காத்தா இயக்குனர், அஞ்சான் ஹீரோ என்று ஆக்ஷன் பிளாக் எதிர்பார்த்து செல்பவர்களுக்கு பேய் ஜானர் என்பது கொஞ்சம் அதிர்ச்சி… அதே போல அந்த ஜானரில் மூழ்கி நிமிர்ந்து உட்காரும் போதும்.. படத்துக்கு இடைவேளையை விட்டு விடுகின்றார்கள்..
இன்டர்வெல்லுக்கு பிறகு பார்த்தீபன் என்ட்ரியில் இருந்து படம் களைகட்டுகின்றது.. வழக்கம் போல வெங்கட் பிரபுவின் ஆறாவது விரல் பிரேம்ஜி அவருடைய ஆறாவது படத்திலும் நடித்து இருக்கின்றார்….

சமுத்திரகனி வில்லன் பாத்திரம்… உன்னை சரணடைந்தேன்… திரைப்படத்தில் வெங்கட் பிரபுவை வைத்து படம் இயக்கிய போது கூட 10 வருடத்துக்கு பிறகு வெங்கட்பிரபு ஒரு கமர்ஷியல் டைரக்டராக மாறுவார் என்று கனவிலும் நினைத்து பார்த்து இருக்கமாட்டார்…
இரண்டாம் பாதியில் கண்தானம் பற்றி விழிப்புனர்வு கதையோட்டத்தோடு சொல்லியதோடு அதில் ஜெய்யையும் எங்கேயும் எப்போதும் காட்சிகளை இணைத்தது வெரி கிளவர்.

வெங்கட் பிரபுவின் வழக்கமாக மசாலா பாடல்கள் இந்த படத்தில் இல்லை… பாடல்களும் சொல்லிக்கொள்ளும் படி இல்லை… யுவன் என்னாச்சி.. ?? உங்களுக்கு???

வெங்கட்டின் நெருங்கிய சகா… கேமராமேன் ஷக்தி சரவணனை விட்டு விட்டு ஒளிப்பதிவாளர் ஆர் டி ராஜசேகர் மாஸ் படத்துக்கு ஒளிப்பதிவு செய்து இருக்கின்றார்…இவருக்கும் இது 25 வது படம்… அதே போல எடிட்டர் பிரவினுக்கும் 50 வது படம்.
இந்த படத்திலும் சென்னை 28 இல் நடித்த முக்கால்வாசி பேர் ஒரு காட்சியிலாவது தலைக்காட்டி விட்டு செல்கின்றார்கள்…
நயன்தாராவை இப்படி வீணடித்து இருக்ககூடாது.. என் கடுமையான கண்டனங்களை தெரிவிக்கின்றேன். பிரினிதா பிளாஷ் பேக்கில் வந்து செல்கின்றார்.. மைதாமாவு வெள்ளை..

பிரமானந்தம் இரண்டுமூன்று காட்சிகளில் வந்து கிச்சி கிச்சி செய்கின்றார்.

நிறைய எடுத்து அதன் பின் அதனை பயண்படுத்தவில்லை என்பது கடைசியல் ஓடும் புளுப்பர் காட்சிகளில் தெரிகின்றது.

=========
படத்தின் டிரைலர்.

=====
படக்குழுவினர் விபரம்.

Directed by Venkat Prabhu
Produced by K. E. Gnanavel Raja
Written by Venkat Prabhu
Madhan Karky
(Dialogue)
Screenplay by Venkat Prabhu
Story by Venkat Prabhu
Starring Suriya
Nayantara
Parthiban
Samuthirakani
Pranitha
Premgi Amaren
Music by Yuvan Shankar Raja
Cinematography R. D. Rajasekhar
Edited by Praveen K. L.
Production
company
Aadnah Arts
Distributed by Eros International
Studio Green
Release dates
29 May 2015
Running time
153 minutes
Country India
Language Tamil
====
பைனல் கிக்.

முதல் பாதியில் நிறைய தொய்வு…. இரண்டாம் பாதியில் இந்த படம் நிமிர்ந்து உட்கார வைக்கின்றது… அதனால் இந்த படம் தப்பித்து விட்டது என்றே சொல்ல வேண்டும்…மாஸ் கண்டிப்பாக டைம் பாஸ் செய்ய ஏற்ற திரைப்படம்.
=

ஜாக்கிசேகர்.

#massu #Masss #MassuEngiraMassilamani

வீடியோ விமர்சனம்.