Oh kadhal kanmani movie trailer review

11009175_10205994527889017_1088497403049030047_n

தமிழில் படத்துக்கு படம் வித்தியாசமாக வேவ்வேறு ஜானர்களில் படம் எடுக்கும் இயக்குனர் மணிரத்னம்… தமிழ் இயக்குனர்களை வட நாட்டு பக்கம் தலை நிமிர வைத்தவர்களில் மணியும் ஒருவர்.

மணியின் முந்தைய திரைப்படமான கடல் தோல்வியை சந்தித்தது…

இயக்குனர் மணிரத்னத்துக்கு ஒரு மின்னல் வெற்றி தேவையாய் இருக்கின்றது..நன்றாக படம் எடுத்துக்கொண்டு இருந்தார்… ரோஜாமற்றும் பம்பாய் வெற்றி வடநாட்டு மோகத்தை கொடுக்க ஆத்துல ஒருகால் சேத்துல ஒருக்கால் வச்ச காரணத்தால் மணி ரத்னம் சவுத் நார்த் ரெண்டு ரசிகர்களையும் திருப்தி படுத்தவில்லை… என்றுஅவர் மீது குற்றச்சாட்டு உண்டு… இந்த படம் அந்த குற்றச்சாட்டுக்கு ஓ காதல் கண்மணி பதில் சொல்லும் என்று எண்ணுகின்றேன்…

1989 இதயத்தை திருடாதே முழுக்க முழக்க காதல் திரைப்படம்…

2000 ஆம் ஆண்டில் அலைபாயுதே பெரிய வெற்றி… அதன் பின் இளம் காதலர் கதைகளை மணிரத்னம் தொடவில்லை… அதன்பின் எல்லாம் மெச்சூர்ட் காதல்கள்தான்… கடல் திரைப்படத்தை சொன்னாலும்… அது பெரிதாய் மனதில் நிற்கவில்லை. கடல் படத்தின் காதலர்கள் அலைபாயுதே மாதவன் ஷாலினி போல மனதில் பதியவில்லை என்பதுதான் முக்கியமான சேதி…

என்னை கேட்டால் அலைபாயுதேவுக்கு பிறகு ஆயுத எழுத்து திரைப்படத்தில் சித்தார்த் திரிஷா காதல் போர்ஷன் இளமை ததும்பும்… அதன் பின் மனதில் எதுவும் நிற்கவில்லை தைக்கவில்லை.திரும்பவும் அலைபாயுதே பாணியில் ஓ காதல் கண்மணி திரைப்படம் வெளிவரபோகின்றது..

அலைபாயுமே படத்துக்கு பிறகு பிசிஸ்ரீராம் மணிரத்னம்,ரகுமான் கூட்டணி 14 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைகின்றன…துல்கர் சல்மான், நித்யாமேனன்… பம்பாய் கதைக்களம்… சவுத் நார்த் ரெண்டு ரசிகர்களுக்கும் தீனி போட்டாச்சா..? உஸ்தாத் ஓட்டல் மலையாள பட வெற்றி ஜோடி…

செம யூத் புல்லான டிரைலர்… செம பிரஷ்ஷா இருக்கு…

டிரைலர் முத ஷாட்டே… மும்பை கட்டிடம்…

துல்கர் ஆதியாவும்.. நித்யா மேனன் தாரா கேரக்டர்களில் நடித்து இருக்கின்றார்… இன்னாடா சர்ச்சீன் போல இருக்குன்னு நினைச்சா தமிழ் பேரு சொல்லறாங்க.. காரா ஆட்டக்கார ரகுமான் இசையில் பெப்பியா ஒலிக்குது…

ரயில்ல ஸ்டேஷன்ல பார்த்த நித்யமேனன் மீது காதல் ஆபிஸ்ல போய் துல்கர் போய் பேசறார்… அடிக்கடி பொண்ணுங்க பின்னாடி இப்படித்தான் சுத்திவியான்னு நித்யா கேட்க… பொறந்ததில் இருந்து.. என்கின்றார் துல்கர்….

சத்தியமா நான் கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்ன் துல்கர் சொல்ல .. அதுக்கு நித்யா ஒன்லி கேர்ள் பிரண்ட்ஸ்சா கேட்கறா‘ங்க… ஆமாம் என்று துல்கர் சொல்ல சில பல ஷாட்டுகள் யூத் புல்லா இருந்தாலும் அலைபாயுதேவை நியாபகப்படுத்துகின்றது….

காதலர்களாக சிறக்கடிக்கறாங்க..

நித்யா சொல்றாங்க…
நான் வேணா அப்பா அம்மாவை நாளைக்கு வர சொல்லி நிச்சயம் பேச வைக்கட்டுமா என்று கேட்கும் போது … பேய் முழி துல்கர் முழிக்க அது பொய் என்று நித்யா முக மாற்றத்தில் வெளிப்படுத்த துல்கர் அப்பாடான்னு ரிலாக்ஸ் ஆகின்றார்…

அதோட ஓ காதல் கண்மணின்னு பேர் வருது…
ஆனா என்னை பொருத்தவரை முழுக்காதலோட துல்கர் கிட்ட கல்யாண பேச்சை நித்யா எடுக்க… அவன் அது வேண்டாம் என்று பதற தன் காதலை அப்படியே மென்னு முழுங்கி லலுலாயின்னு சொல்ற மாதிரி படுது.. அது என்ன வென்று எப்ரலில் படம் ரிலிசின் போது தெரிந்து விடும்…

பம்பாய்ல ஷுட் வச்சா…. கேட்வே ஆப் இந்தியாவை விடமாட்டார்…. நாயகன், பம்பாய்… இப்ப ஓ காதல் கண்மணி. அதே போல ரயில்ன்னா மணிரத்னத்துக்கு ரொம்ப பிடிக்கும்…. அது போல காதலன் சந்தோஷத்தில் மிதந்த கடற்கரை ஓரத்தில் பைக் அல்லது ஜிப்சியில் கடல் அலைய கிழத்த படி பறப்பது…. அதே போல அலைபாயுதேவுல மஞ்சள் போர்வைன்னா..இதுல ரோஸ் போர்வை… என்று கிளிஷே காட்சிகளாக இருந்தாலும் சோ கியூட்…

மீண்டும் மணிரத்னம் அந்த படத்தின் மூலம் வெற்றிக்கொடி நாட்ட ஜாக்கி சினிமாஸ் சார்பாக வாழ்த்துகளை தெரிவிப்போம்.