இதுவரை இந்திய சினிமாவிலேயே யாரும் கையாலாத பெண்கள் கிரிக்கெட்டை பற்றி ஒரு கதையை எழுதி இயக்கவுள்ளார் அருண்ராஜா காமராஜ்

அருண்ராஜா காமராஜ் தான் இயக்கத்தில் கால் பதிக்கும் செய்தியை வெளியிட்டதிலிருந்தே அது குறித்து சினிமா ரசிகர்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு அவர் இயக்குனர் அவதாரம் எடுத்தது மட்டுமில்லாமல் அவர் அதற்கு தேர்ந்தெடுத்துள்ள கதை களமும் தான் காரணம்.

இதுவரை இந்திய சினிமாவிலேயே யாரும் கையாலாத பெண்கள் கிரிக்கெட்டை பற்றி ஒரு கதையை எழுதி இயக்கவுள்ளார் அருண்ராஜா காமராஜ். இந்திய கிரிக்கெட் அணிக்கு ஐந்து ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள ஸ்னேஹல் பிரதான் இப்படத்திற்கு தனது ஆதரவை தெரிவித்தது மட்டுமில்லாமல் இப்படத்திற்கு தன்னால் முடிந்த அனைத்து உதவியையும் தான் செய்ய தயாராக இருப்பதாக கூறியிருப்பது தான் தற்போதய பரபரப்பான செய்தி.

ஸ்னேஹாவின் இந்த அறிவிப்பு தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக்களிப்பதாகவும், அவரது உதவியை சந்தோஷமாக ஏற்றுக்கொள்வதாகவும், இப்படத்தின் தரத்திற்கும் விளம்பரத்திற்கு இது மிகவும் உதவியாக இருக்கும் எனவும் அருண்ராஜா காமராஜ் கூறியுள்ளார்.

இப்படத்தில் இந்திய பெண்கள் அணியை சேர்ந்த யாரேனும் நடிக்க விரும்பினால் தான் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வதாகவும் அருண்ராஜா கூறியுள்ளார். ஒரு பெரிய அளவில் இப்படத்திற்கான நடிகைகள் தேர்வு நடத்தப்படவுள்ளது. கிரிக்கெட் ஆட தெரிந்த, நன்கு நடிக்கவும் தெரிந்த பெண்களுக்கு இந்த தேர்வு ஒரு அருமையான வாய்ப்பாக அமையும் என நம்பப்படுகிறது.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *