Sardaar Gabbar Singh Telugu Movie Review by Jackiesekar

 

 

70 கோடி முதலீட்டில் 44 வயது பவன் கல்யாண் நடிப்பில் வெளி வந்து இருக்கும் திரைப்படம் சர்தார் கப்பர் சிங்.

2012 ஆம்  ஆண்டு வெளியாக கப்பர் சிங் வசூலில் சாதனை  படைக்க சும்மா இருப்பார்களா…? நாயகன்  பவனே கதை  திரைக்கதை எழுதி நடிக்கவும் செய்து இருக்கின்றார். படத்தை ரவிந்திரா இயக்கி இருக்கின்றார்.

சர்தார் கப்பர் சிங் திரைப்படத்தின் கதை ?

மத்திய பிரேதேஷத்தில் இருக்கும் ரத்தன்பூரை பைரோன் சிங் என்ற கொடுமைக்காரன் ஆட்டி படைக்கிறான்.. இன்ஸ்பெக்டர் சர்தார் கப்பர்சிங் எப்படி  வழிக்கு கொண்டு வந்து ரத்தன் பூரை அமைதி படுத்துகின்றான் என்பதுதான் சர்தார் கப்பர் சிங் திரைப்படத்தின் கதை.

பவன் கல்யாண்.. மனிதர் பின்னுகின்றார்.. அவரை பிடித்து விட்டால் போதும் படத்தை அனு அனுவாக ரசிக்கலாம்.. அந்த அளவுக்கு படம் முழுக்க  சேட்டையில்  விளையாடி இருக்கின்றார்.. காஜல்  அகர்வால் சாதாரண பெண் இல்லை இளவரசி என்று தெரிந்ததும் கை கட்டி  நிற்கும் இடத்தில் கவர்கின்றார்.

காஜல் அகர்வால அழகு பதுமையாக  கிளாமர் பதுமையாக பின்னு இருக்கின்றார்.,.. இளவரசி என்பதால் காஸ்ட்யூமில் குறை வைக்காமல்  செம ரிச்சாக கொடுத்து இருக்கின்றார்கள்.. வளைவான இடுப்போடு ஓடுகின்றார் ஆடுகின்றார் காதல் செய்கின்றார்… ரசிகர்கள் வாய் பிளந்து ரசிக்கின்றார்கள்.

பிரமாணந்தம் பவன் காமினேஷன் சொத்ப்பல் என்றாலும்  சில காட்சிகளில் ரசிக்க வைக்கின்றார்கள்..

ஒளிப்பதிவு ஆர்தர் வில்சன் பிரேமுக்கு  பிரேம் ரிச்சாக காட்டி இருக்கின்றார்கள்.. நம்ம முடியாத கதை ஆனாலும் படம் முடிந்த உடன்தான் நமக்கு லாஜிக் மிஸ்டேக் தெரிகின்றது.. அந்த அளவுக்கு பரபர என இருக்கின்றது.. ஆனால் வழக்கமான கரம் மசாலா என்பதில் மாற்றுக்கருத்து இல்லை..

 

இந்த திரைப்படத்துக்கு ஜாக்கிசினிமாஸ் அளிக்க கூடிய மதிப்பு ஐந்துக்கு மூன்று…

ஜாக்கிசேகர்

09/04/2016

 

வீடியோ விமர்சனம்.

 

https://youtu.be/IMbr_RSpAY0