புதுமையாக , சுவாரஸ்யமாக எடுக்கப்பட்டுள்ள 35 நிமிட குறும்படம் ‘ஹாப்பி நியூ இயர்’

புதுமையாக , சுவாரஸ்யமாக  எடுக்கப்படும் குறும்படங்கள் தனக்கான ரசிகர்களை நிச்சயம் சென்றடைந்து  அதன்மூலம் அதில் பணிபுரிந்த நடிகர்களுக்கும் தொழில்நுட்பக்கலைஞர்களுக்கும் மேலும் பெரிய வாய்ப்புகளை பெற்று தரும். அவ்வாறு எடுக்கப்பட்டுள்ள 35 நிமிட குறும்படம் தான் ‘ஹாப்பி நியூ இயர்’. பல படங்களில் கதாநாயகனாக நடித்துள்ள நடிகர் விஜித், ‘ஹாப்பி நியூ இயர்’ குறும்படத்தை இயக்கி, தயாரித்து கதாநாயகனாக நடித்துள்ளார். இது ஒரு காதல்-ஆக்ஷன் குறும்படமாகும். இது குறித்து விஜித் பேசுகையில், ” ஒரே காலனியில் வாழ்ந்து, ஒரு ஆபீஸில் வேலை செய்துதுகொண்டு, ஒருவர் மீது மற்றொவருக்கு ஈர்ப்பு இருந்தும் வெளிப்படையாக சொல்லிக்கொள்ள பயப்படும் ஒரு இளஞ்சோடியை பற்றிய கதை தான் ‘ஹாப்பி நியூ இயர்’. ஒரு டிசம்பர் மதம் 31 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு தொடங்கி இரவு 12 மணிக்கு முடியும் கதை இது. இந்த இடர்பட்ட 12 மணி நேரத்தில் என்னவெல்லாம் நடந்தது என்பது தன் இந்த குறும்படம். இந்த குறும்படத்தில் காதல்,ஆக்ஷன், திடீர் திருப்பங்கள் ஆகியவை சரியான கலவையில் இருக்கும். முன்னால்  ‘மிஸ்.தென்னிந்தியா’ அக்ஷரா சுதாகர் ரெட்டி இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். ‘பைரவா’ பட புகழ் தவசி ராஜா இப்படத்திற்கு சண்டை காட்சிகள் அமைத்துள்ளார். மஸ்தான் காதர் இசையில், ராஜேஷ் நாராயணன் ஒளிப்பதிவில், வித்து ஜீவின் படத்தொகுப்பில் ‘ஹாப்பி நியூ இயர்’ உருவாகியுள்ளது.படத்தில் அழகான காதல் காட்சிகள் தவிர சண்டை கட்சிகளும் கிளைமாக்ஸ் கட்சியும் சிறப்பம்சங்களாகும். ‘ஹாப்பி நியூ இயர்’ குறும்படத்தின் தொடர்ச்சி பாகங்களாக ‘ஹாப்பி வாலெண்டைன்ஸ் டே’ மற்றும் ‘ஹாப்பி தீபாவளி’ என்ற குறும்படங்களை இதே அணியை கொண்டு உருவாக்கவுள்ளோம். அதற்கான கதை , திரைக்கதை ஆகியவை தயாராக உள்ளது. ‘ஹாப்பி நியூ இயர்’ என்ற தலைப்பும் அதனை சார்ந்த பாடல்களும் உலகமே கொண்டாடும் இந்த தேதியை மக்கள் மனதில் என்றுமே நிலைத்திருக்கச்செய்யும்” என நம்பிக்கையோடு கூறினார் நடிகர் விஜித்.