S/o Satyamurthy Telugu Movie review by jackiesekar

so-satyamurthy-movie-rating-and-review-with-story-and-release-date-poster

 

 

தெலுங்கு படம் பார்க்க வேண்டும் என்று என்னத்தை தோற்று வித்த திரைப்படம்   மகேஷ்பாபுவின்  ஒக்கடு… மற்றும் அத்தடு….

அத்தடு படம் என் ஆல்டைம் பேவரைட் திரைப்படம். அந்த படத்தின் ஆக்ஷனும்,அதில்  வரும் காதல் காட்சிகள் மற்றும் நகைச்சுவையும்… ஒரு பக்கா ஆக்ஷன் கமர்ஷியல் திரைப்படம்  அத்தடு  என்றால்  அது மிகையில்லை.

மகேஷ்பாபு திரிஷா பின்னி இருப்பார்கள்……

இயக்குனர் திருவிக்ரம்… நுவே நுவே  திரைப்படம் மூலம் அறிமுகமானாலும்…

பக்காவான ஸ்கிரிப்ட் அண்டு டயலாக் ரைட்டர்.,..

அல்லு அர்ஜினோடு  அவர் இயக்கத்தில் சில வருடங்களுக்கு முன் வெளிவந்த, ஜூலாயி எனக்கு மிகவும் பிடித்த திரைப்படம்… காரணம்.. அந்த படத்தின் ஸ்கிரிப்ட் அற்புதமான ஸ்கிரிப்ட் என்பேன்… அதை கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்த்து தமிழில்  மீண்டும்ஒரு கொத்து பரோட்டா போடலாம்… அந்த அளவுக்கு அருமையான ஸ்கிரிப்ட்.

திருவிக்ரம்படங்களில் ஒரு ஆக்ஷன் பிளாக்குற்கு பிறகு ஒரு செண்டிமென்ட் சீன்,. ஒரு நகைச்சுவை  காட்சி என தெலுங்கு மக்களின் ரசனையின் நாடி  அறிந்து வைத்து இருப்பவர் திருவிக்ரம்.

சன்  ஆப் சத்தியநாராயணா வழக்கமானதிருவிக்ரம் படம்தான்… ஆனாலும் பிரசன்ட் செய்த விதத்தில் மொக்கைஇல்லை என்று சொல்ல வைத்து இருக்கின்றார்கள்…

========

சன் ஆப் சத்தியநாராயனா திரைப்படத்தின் கதை என்ன??

சந்தியநாராயானா பிரகாஷ்ராஜ்… பெரிய பணக்காரபிசினஸ்மேன்.. அவருக்கு இரண்டு ஆண் பிள்ளைகள்… அதில் சின்னவர்தான் அல்லு அர்ஜூன்.. ஒரு விபத்தில் பிரகாஷ்ராஜ்  பலியாக.. கம்பெனி திவால் ஆகி.. குடும்பம் நடுத்தேருவுக்கு வந்து  அந்த குடும்பத்தையும் அப்பாவின் பெயரில் இருக்கும் சந்தியத்தையும் எப்படி காப்பாற்றினார் என்பதே இந்த திரைப்படத்தின்  கதை..

SO-Satyamurthy-Movie-Poster-Designs-7

=======

படத்தின் சுவாரஸ்யங்கள்.

 

மெருகுஏறி இருக்கின்றார்… அல்லு…ஜிம்கேரி ஹேர் ஸ்டைலில் கலக்குகின்றார்… நடிப்பிலும் பின்னி இருக்கின்றார்… அதே போல நடனம் மற்றும் காஸ்ட்யூமில் பிரித்து மேய்ந்து இருக்கின்றார் என்றே  சொல்ல வேண்டும்.

சமந்தா  உதட்டு லிப்ஸ்டிக்கை குறைத்தால் நலம்.. அதே போல  அவர்  அல்லுவிடம் காதலை சொல்லும் அந்த தயக்க காட்சியில் நீதானே என் பொன் வசந்தம் திரைப்படத்தின்   நடிப்பை  நியாபகபடுத்துகின்றார். லோ கட் சுடிதாரில் குனிந்து நிமிர்ந்து  இம்சை படுத்துகின்றார்..

நித்யாமேனன்  கொஞ்சம் காட்சியில்  வந்தாலும் மனதை அள்ளுகின்றார்..

இடைவேளைக்கு உபேந்திரா.. சினேகா, அலி., பிரேமானந்தா போன்றவர்கள் சிரிப்புக்கும் ஆக்ஷனுக்கு கேரண்டி தருகின்றார்கள்..

நடிகர் எம்எஸ்  நாராயணா நடித்த கடைசி படம்…  டைட்டிலில் அவருக்கு அஞ்சலி செலுத்துகின்றார்கள்…

கேமராமேன் பிரசாத் கலர் புல்  லைட்டிங்கில்….  தேவி ஸ்ரீ பிராசாத்தின் பாடல்கள் ரசிக்கும் விதத்தில் இருக்கின்றன… ஏற்கனவே  கேட்ட ரகம் என்றாலும்  ரசிக்கலாம்.

=========

படத்தின்   டிரைலர்..

=========

படக்குழுவினர் விபரம்

Directed by Trivikram Srinivas
Produced by S. Radha Krishna
Written by Trivikram Srinivas
Starring Allu Arjun
Upendra
Prakash Raj
Rajendra Prasad
Samantha Ruth Prabhu
Sneha
Adah Sharma
Nithya Menen
Music by Devi Sri Prasad
Cinematography Prasad Murella
Edited by Prawin Pudi
Production
company
Haarika & Hassine Creations
Distributed by Classic Entertainments
(Overseas)
Sri Venkateswara Creations
(Nizam)
Release dates
9 April 2015
Country India
Language Telugu

===========

பைனல் கிக்.

பார்த்து பார்த்து சலித்து போன கதை என்றாலும் தன் திரைக்கதை யுத்தி மூலம் படத்தை இயக்குனர் திருவிக்ரம் தொய்வில்லாமல் கொண்டு  சென்றுள்ளார்.

படத்தை  கண்டிப்பாக  பேமிலியோடு போய் ஒரு முறை பார்க்கலாம்.. டைம்பாஸ் மூவி.

=========

வீடியோ விமர்சனம்.

https://youtu.be/1kZVTy7y68k

=========

படத்தோட ரேட்டிங்.

பத்துக்கு ஆறு.

==========

பிரியங்களுடன்

ஜாக்கிசேகர்..

 

follow

https://www.youtube.com/user/JackieCinemas

Home

https://www.facebook.com/JackieCinemas